Enable Javscript for better performance
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு

    By dn  |   Published on : 17th April 2015 01:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மே 12ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து நான்கு பேர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு முழுமையாக முடியும் வரை ஜாமீனை நீட்டிக்க  வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதி தத்து நிராகரித்துவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai