Enable Javscript for better performance
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

    By DN  |   Published on : 17th April 2015 09:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிக்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

    தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை -டான்செட்- நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

    2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னை மையத்தில் நேரடியாக பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் தேதியை பல்கலைக்கழகம் இப்போது நீட்டித்துள்ளது.

    அதன்படி, தேர்வுக்கு பதிவு செய்ய ஏப்ரல் 25 கடைசித் தேதியாகும். சென்னை மையத்தில் நேரடியாக பதிவு செய்ய ஏப்ரல் 29 கடைசித் தேதியாகும்.

    இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai