Enable Javscript for better performance
திரிணாமுல் காங். உள்கட்சி மோதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திரிணாமுல் காங். உள்கட்சி மோதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு

    By DN  |   Published on : 17th April 2015 03:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசல் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொல்கத்தாவின் ஹவுரா பகுதியில் கடைகளை அடித்து நொறுக்கியும் அப்பகுதியில் வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

     

    மேற்குவங்க மாநிலத்தின் தலைமைச்செயலகம் அருகே நடந்த வன்முறையால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai