Enable Javscript for better performance
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஜெயசுதா தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    jayasutha

    தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகை ஜெயசுதாவுக்கு 152 வாக்குகள் கிடைத்தது. செயலாளர் மற்றும் 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது.

    702 வாக்குகள் கொண்ட இந்த தேர்தலில் 394 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேந்திர பிரசாத் 237 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயசுதாவுக்கு 152 வாக்குகள் பெற்றார்.

    நடிகை ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளிமோகன், ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai