Enable Javscript for better performance
நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும்: வெங்கய்ய நாயுடு- Dinamani

சுடச்சுட

    

    நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும்: வெங்கய்ய நாயுடு

    By DN  |   Published on : 17th April 2015 09:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkaiya

    இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

    இதுகுறித்து ஹைதரபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    பல்வேறு மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே, நிலம் கையகச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கொண்டுவந்த நிலம் கையகச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களே வலியுறுத்தியிருந்த போதும், அந்தச் சட்டத்தை பாஜக ஆதரித்தது.

    தற்போது வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதை அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் எதிர்த்து வருகிறது.

    பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில்,  நிலம் கையக மசோதாவைத் தவிர, சரக்கு - சேவை வரி மசோதா, கருப்புப் பணத் தடுப்பு மசோதா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதற்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai