Enable Javscript for better performance
மனிதநேயம் வளர ஹிந்துத்துவம் மூலமாக பாடுபட வேண்டும்: மோடி- Dinamani

சுடச்சுட

    

    மனிதநேயம் வளர ஹிந்துத்துவம் மூலமாக பாடுபட வேண்டும்: மோடி

    By DN  |   Published on : 17th April 2015 09:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    மனிதநேயம் வளர்வதற்கு ஹிந்துத்துவம் மூலமாக பாடுபட வேண்டியது அவசியம் என்று கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    வான்கூவர் நகரில் உள்ள சீக்கியர் கோயில் மற்றும் லக்ஷிமி நாராயண் கோவிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த மோடியும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், அங்கு நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் மோடி கூறியதாவது:

    மனிதநேயம் வளர்வதற்கு ஹிந்துத்துவம் மூலமாக பாடுபட வேண்டியது அவசியம்.

    ஹிந்துத்துவம், என்பது மதம் அல்ல; அது வாழ்க்கை முறை என்ற அருமையான விளக்கத்தை, தில்லி உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தை நான் நம்புகிறேன்.

    ஹிந்து மதம், அறிவியல்பூர்வமான வழியில் வன உயிரினங்கள் உள்பட இயற்கையின் நன்மைக்காக செயலாற்றி வருகிறது என்றார் மோடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai