Enable Javscript for better performance
மனைவி கொலைக்கு பழிவாங்க 4 பேரை கொன்ற தொழிலதிபர் : விதிவசத்தால் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    

    மனைவி கொலைக்கு பழிவாங்க 4 பேரை கொன்ற தொழிலதிபர் : விதிவசத்தால் சிக்கினார்

    By dn  |   Published on : 17th April 2015 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    murder

    தன்னுடைய மனைவியைக் கொலை செய்த கூலிப் படையினர் மற்றும் தனது தம்பி உட்பட 4 பேரை சாமர்த்தியமாகக் கொலை செய்த தொழிலதிபர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விதிவசத்தால் காவல்துறையில் சிக்கியுள்ளார். கொலைகளுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைதாகியுள்ளார்.

    சென்னை கொருக்குப்போட்டை இளையமுதலி தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரில், தனது தந்தை ராமச்சந்திரன் (55) என்பவரை காணவில்லை என்று கூறியிருந்தார்.

    அவரைத் தேடி வந்த காவல்துறையினர், கொடுங்கையூரில் அவரை மீட்டு விசாரணை செய்தனர்.

    அப்போதுதான், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அன்பு ஞானதுரையை மிரட்டி பணம் பறிக்கவே தான் தலைமறைவானதாக ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

    ராமச்சந்திரனை காவல்துறையினர் விசாரித்த போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன.

    அதாவது, 1995ஆம் ஆண்டு ஞானதுரை வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது 7 பேர் கொண்ட கும்பல் ஞானதுரையின் மனைவியைக் கொன்றுவிட்டு பணம், நகையைக் கொள்ளையடித்துச் சென்றது.

    இந்த சம்பவத்தில் ஞானதுரையின் தம்பி பால் அன்பழகன்தான், கூலிப்படை வைத்து ஞானதுரையின் மனைவியைக் கொன்று, கொள்ளைச் சம்பவம் போல நாடகமாடியது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மூலம் ஞானதுரைக்கு தெரிய வந்தது.

    தனது மனைவியின் கொலைக்குக் காரணமான கூலிப்படையினர் 3 பேரையும், தம்பி பால் அன்பழகனையும் ஞானதுரையும், அவரது நண்பர் ராமச்சந்திரனும், சிலரது உதவியுடன் சேர்ந்து கொலை செய்தனர். ஆனால் கொலை வழக்குகளில் அவர்கள் சிக்காமல் இருந்தனர். சுமார் 20 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஞானதுரைக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஞானதுரையை மிரட்ட ராமச்சந்திரன் போட்ட கடத்தல் நாடகத்தில், இருவருமே சிக்கிக் கொண்டனர்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இருவரையும் கைது செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai