Enable Javscript for better performance
மஸ்ரத் ஆலம், சையது அலி கிலானிக்கு வீட்டுக்காவல்: பாகிஸ்தான் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    மஸ்ரத் ஆலம், சையது அலி கிலானிக்கு வீட்டுக்காவல்: பாகிஸ்தான் கண்டனம்

    By DN  |   Published on : 17th April 2015 06:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் மஸ்ரத் ஆலம், சையது அலி கிலானி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தாஸ்னிம் அஸ்லம் கான் கூறியதாவது:

    இந்திய அதிகாரிகள் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மஸ்ரத் ஆலம், செய்யது அலி ஷா கிலானி ஆகியோர் மீது உண்மையில்லாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கை எடுத்து உள்ளதற்கு பாகிஸ்தான் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது மிகவும் வருந்தத்தக்க நடவடிக்கையாகும்.

    அமைதியான முறையில் தங்களது உரிமையை வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடத்தியவர்கள் மீது இந்தியா தனது பலத்தை காட்டி உள்ளது.

    காஷ்மீர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்படாத நிலையில் ஐ.நா. தீர்மானத்தின் படி இந்தியாவுக்கு உரிமை இல்லை. பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை எப்போதும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai