Enable Javscript for better performance
மாமனார் பாலியல் தொந்தரவு: மருமகள் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வரதட்சணை தகராறில் மாமனார் தவறான உறவுக்கு அழைத்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பின்னப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவர் பிரகாஷ் (26). இவர் செய்யாறில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் சென்னை பெரம்பூரை சோ்ந்த விஜயலட்சுமி (21) என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    திருமணம் ஆனது முதல் வரதட்சணை சரியாக கொடுக்கவில்லை எனக்கூறி விஜயலட்சுமியை பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷின் தந்தை ஜெயவேல் மருமகள் விஜயலட்சுமியை தகாத உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உடனே அவரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து விஜயலட்சுமியின் தந்தை விஷ்ணு பெரணமல்லூர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai