Enable Javscript for better performance
முன்விரோதம் காரணமாக 2 பேரை வெட்டிக்கொல்ல முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதம் காரணமாக 2 பேரை வெட்டிக்கொல்ல முயற்சி

    By திராவிட மணி  |   Published on : 17th April 2015 03:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரி மூட்டம் போடும் தகராறில் கொலை முயற்சியாக 2 பேர் சரமாரியாக நேற்று(வியாழக்கிழமை) வெட்டப்பட்டார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் காவல் நிலைய சரகம் கீரனூரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் வேல்ச்சாமி(49), கீழத்தூவலைச் சேர்ந்தவர் ரவி. இருவரும் காட்டுக்கருவல் மரங்களை வெட்டி, கரி மூட்டம் போடும் தொழில் நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி முன் விரோதத்தில் ரவி மற்றும் 4 பேர் கும்பலாக வந்து வேலுச்சாமி, இவரது உறவினர் போஸ்(65) ஆகியோரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    சம்பவம் குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வேலுச்சாமி மனைவி புகார் செய்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் என்.நடராஜன் உத்தரன் பேரில், ஆய்வாளர் மூக்கன், சார்பு ஆய்வாளர் ஜான்சி ராணி ஆகியோர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவி உள்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai