Enable Javscript for better performance
லோக் அயுக்தா விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    லோக் அயுக்தா விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    Published on : 17th April 2015 05:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hcmdu

    லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு லோக் அயுக்தா விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட், கனிம மணல் மற்றும் ஆவின் பால் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மணிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து சில மாற்றங்களை செய்ய உள்ளதாகவும், அந்த திருத்தங்களை மத்திய அரசு இறுதி செய்த பின்னர், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு கொண்டுவரப்படும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள் மத்திய அரசு திருத்தங்கள் செய்த பிறகு தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai