Enable Javscript for better performance
வங்கி கணக்குகளில் பணம் செலுத்த பொது இயந்திரம்: ஆர்.பி.ஐ. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வங்கி கணக்குகளில் பணம் செலுத்த பொது இயந்திரம்: ஆர்.பி.ஐ. ஆய்வு

    By DN  |   Published on : 17th April 2015 06:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rbi

    நாட்டின் எந்தவொரு வங்கியில் இருந்தும் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையிலான பொது இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    வங்கிகளில் நாம் நேரில் சென்று, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, பணம் செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. இணையதள வரவால் அது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. மேலும், தற்போது ஏ.டி.எம். மையங்களிலும் வங்கி வளாகத்தினுள்ளும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் வைக்கப்பட்டு அதன் மூலம் கணக்குகளில் பணம் செலுத்த முடியும். ஆனால், அந்த இயந்திரங்களில் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே பணம் செலுத்த முடியும்.

    இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து மும்பையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எச்.ஆர்.கான் கூறுகையில், தற்போது ஏ.டி.எம் மையங்களில் பொதுவாகப் பணம் எடுக்ககும் வசதி உள்ளது. அதேபோல், எந்தவொரு வங்கியில் இருந்தும் நாட்டின் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக ஒரு தொழில்நுட்ப முயற்சியை அறிமுகப்படுத்தும்போது, அதைக் கொண்டு லாபம் ஈட்டுவது அவசியம். இல்லாவிட்டால், அத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோன்று, பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத் திட்டமும் முதலில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன்தான் செயல்படுத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai