Enable Javscript for better performance
விழுப்புரத்தில் 8 குழந்தை பலி: விசாரணைக்கு வலியுறுத்தும் ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் 8 குழந்தை பலி: விசாரணைக்கு வலியுறுத்தும் ராமதாஸ்

    By dn  |   Published on : 17th April 2015 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த 8 குழந்தைகள் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த எட்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விழுப்புரத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு முந்தைய நிகழ்வுகளைப் போலவே விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தான் இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

    தருமபுரியில் தொடங்கி விழுப்புரம் வரை நடந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரிழப்புக்கு  மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாதது எந்தளவுக்கு உண்மையோ, அதைவிட இரு மடங்கு உண்மை தமிழகத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளும், தாய்மார்களும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான். இந்தியாவில் கருவுற்ற பெண்களில் 50 விழுக்காட்டினரும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காட்டினரும் சத்துக்குறைவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என நேற்று முன்நாள் வெளியிடப்பட்ட பன்னாட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊட்டச்சத்து நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. தமிழகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31 விழுக்காட்டினர் வளர்ச்சி குறைபாட்டாலும்,  23 விழுக்காட்டினர் உடல் இளைப்பாலும்  26 விழுக்காட்டினர் எடை குறைவாலும், 73 விழுக்காட்டினர் சத்துக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக விழுப்புரம் உயிரிழப்புகள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க கருவுற்ற தாய்மார்களுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் நுண்ணூட்டச்சத்து மிகுந்த உணவு  வகைகளை அரசே வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கிய காரணம் மது தான் என்பதால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai