Enable Javscript for better performance
20 சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு2- Dinamani

சுடச்சுட

    

    20 சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு2

    By DN  |   Published on : 17th April 2015 07:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20-ec

    ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை நடத்தும்படி, அந்த மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீஸார் திட்டமிட்டு, கொடூரமாக கொலை செய்துள்ளனர்; ஆதலால் இந்த சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறிவதற்காக 5 பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி செங்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 5 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai