Enable Javscript for better performance
20 தமிழர்கள் படுகொலையில் அரசு மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    20 தமிழர்கள் படுகொலையில் அரசு மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்

    By DN  |   Published on : 17th April 2015 05:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vkanth

    ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக அரசு கடிதம் மட்டும் எழுதிவிட்டு, மௌனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    'ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் திட்டமிட்டுத்தான் படுகொலை செய்யப்பட்டனர் என்பது உறுதி செய்யும் விதமாக உள்ளது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனசாட்சியோடும், நீதிமன்றத்தின் மாண்பை நிலை நிறுத்தும் பொருட்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்படவில்லை. தமிழர்களைப் படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு கடிதம் மட்டும் எழுதிவிட்டு, மௌனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

    6 பேரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்வதன் மூலமே, படுகொலை என்பதை நிரூபிக்க முடியும். ஆனால், இதையெல்லாம் அதிமுக அரசு பொருட்டாகவே எண்ணாமல் மௌனம் சாதிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகமான உண்மைகளைத் தெரிந்த பொதுமக்கள் நீதிமன்றத்திலோ, தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வர்களின் உண்மை அறியும் குழுவிடமோ, காவல்துறையிடமோ தெரிவிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    அப்படித் தெரிவிப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால், ஆந்திர படுகொலை தொடர்பாக தெரிந்தவர்கள் மேற்கண்டவர்களிடம் தகவல் தெரிவிக்க முன் வரவேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்போ, இழப்பீட்டுத் தொகையோ நிவாரணமோ கிடைக்க உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai