Enable Javscript for better performance
20 தமிழர்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது ஏப்ரல் 20 இல் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    20 தமிழர்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது ஏப்ரல் 20 இல் விசாரணை

    By DN  |   Published on : 17th April 2015 06:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20-ec

    ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் குறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அந்த மாநில அதிரடிப்படையினர் சுட்டு படுகொலை கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஏற்கனவே தாக்கல் செய்த மனு நிலுவையிலுள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், இந்த இரு மனுக்களையும் இணைத்து வரும் 20 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai