Enable Javscript for better performance
8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை தேவை: ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை தேவை: ராமதாஸ்

    Published on : 17th April 2015 07:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    விழுப்புரம் மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த 8 பச்சிளம் குழந்தைகள் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த 8 பச்சிளம் குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

    தமிழகத்தில் ஊட்டச்சத்து நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. தமிழகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31 சதவீதத்தினர் வளர்ச்சி குறைபாட்டாலும், 23 சதவீதத்தினர் உடல் இளைப்பாலும், 26 சதவீதத்தினர் எடை குறைவாலும், 73 சதவீதத்தினர் சத்துக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் இளம் தாய்மார்களையும், பச்சிளம் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

    தர்மபுரி மற்றும் விழுப்புரத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒரு துளி தான். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அது உடனடியாக ஊடகங்கள் மூலம் வெளியாகி விடுகிறது. ஆனால், கிராமப்புற மருத்துவமனைகளில் ஏற்படும் இதுபோன்ற உயிரிழப்புகள் வெளியில் தெரிவதில்லை.

    இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக விழுப்புரம் உயிரிழப்புகள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க கருவுற்ற தாய்மார்களுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் நுண்ணூட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை அரசே வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, நுண்ணூட்டச்சத்து குறைபாட்டுக்கு முக்கிய காரணம் மது தான் என்பதால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai