Enable Javscript for better performance
8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: விஜயகாந்த் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    
    vkanth

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்,கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    விஜயகாந்த்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் 2 நாள்களில் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது.

     தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

     மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், நர்சுகள் இல்லை என்று கடந்த முறை சுட்டிக்காட்டினேன்.

     ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்  இந்தச் சோகம் தற்போதும் நிகழ்ந்துள்ளது.

     மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அரசு ஒதுக்கும் நிதியில் முறைகேடின்றி தரமான உபகரணங்களையும், தேவையான அளவு மருந்துகளையும் வாங்க வேண்டும்.

     மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி முழு சுகாதாரத்துடன் அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai