சுடச்சுட

    

    தில்லி தேர்தல் முடிவு: எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு என மம்தா பானர்ஜி கருத்து

    Published on : 10th February 2015 01:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mamta banerjee

    தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து இந்த தேர்தல் முடிவு மக்களுக்கு கிடைத்த வெற்றி. பழி வாங்கும் அரசியல், எதேச்சதிகாரம், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான தீர்ப்பு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும் போது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று கூறியுள்ளார்

    தில்லி தேர்தல் முடிவால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தில்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்று புதிய முதல்-மந்தரியாக பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.என்றும், கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai