Enable Javscript for better performance
பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் செல்கின்றனர்: முதல்வர் மாஞ்சி சர்ச்சை பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் செல்கின்றனர்: முதல்வர் மாஞ்சி சர்ச்சை பேச்சு

    By dn  |   Published on : 17th February 2015 05:09 PM  |   அ+அ அ-   |    |  

    manchi

    பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் வெளியே செல்கின்றனர் என்று அம்மாநில முதல்வர் மாஞ்சி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    பீகாரில் உள்ள ஆண்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது மனைவியுடன் வெளியே செல்கின்றனர். 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் செல்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் திருமணமானவர்களும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருக்கின்றனர். பல இளைஞர்கள் இளம் பெண்களும் விருப்பத்தின்பேரிலேயே இணைகின்றனர். இதில் ஒன்றும் தவறில்லை என்று கூறியுள்ளார்.  முதல்வரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அரசு திட்டங்களுக்கு கமிஷன் பெற்றேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai