Enable Javscript for better performance
காதல் வலையில் வீழ்த்தி 4 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    காதல் வலையில் வீழ்த்தி 4 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண் கைது

    By dn  |   Published on : 26th February 2015 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lady

    கோவையை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை–பணத்தை அபகரித்துக்கொண்டது தெரியவந்தது. 

    தற்போது இன்னொரு வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முயன்று வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகாரை அடுத்து இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி வழக்குப்பதிவு செய்து காயத்ரியிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பிஎஸ்சி படித்து வந்தாராம். வரண் தேடுவதாக் கூறி இணையதளம் மூலம் வசதியான வாலிபர்களை வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை, பணத்தை அபகரித்த பின் அவர்களை விட்டு வந்துவிடுவதும் தெரியவந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயர்களை மாற்றி செயல்பட்டாராம்.

    காயத்ரி 2010–ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரையும், 2012–ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமாரையும், 2013–ம் ஆண்டு ராஜகோபால் என்கிற கோவில் பூசாரியையும் திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் நகைகளை பறித்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இதன் பின்னர் முகப்பேறு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை மணந்தது தெரியவந்தது. மேலும் தற்போது அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். இவர்களது திருமணம் திருவெற்றியூரில் நடக்கவிருந்த நிலையில் சீனிவாசன் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் காயத்ரியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai