Enable Javscript for better performance
அண்ணா நினைவு நாள்: கலைஞர் தலைமையில் பிப்.,3ல் அமைதிப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா நினைவு நாள்: கலைஞர் தலைமையில் பிப்.,3ல் அமைதிப் பேரணி

    By dn  |   Published on : 27th January 2015 01:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karuna

    பேரறிஞர் அண்ணாவின் 46வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதியன்று கலைஞர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து, சென்னை மேற்கு-சென்னை தெற்கு-சென்னை கிழக்கு-செனைனை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பியுள்ள அறிக்கை:

    பேரறிஞர் அண்ணா 46வது நினைவு நாளினையொட்டி கலைஞர் தலைமையில், பொதுச்செயலாளர் மு.க ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதியன்று காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில்  அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

    இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதில் கழக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai