Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் சாவு

    By தன.திராவிட மணி  |   Published on : 27th January 2015 05:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதியதில் பிளஸ்-2 மாணவர், திங்கள் கிழமை இறந்தார். படுகாயம் அடைந்த பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    சாயல்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் சோலை பிரசாந்த்(18). இவர் உள்ளூர் அரசு மேனிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் மகன் முத்துப்பாண்டி(19), இவர் சாயல்குடி அருகே வேம்பாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 20-ம் ஆண்டு வகுப்பு படித்து வருகிறார். முத்துப்பாண்டிக்கு வாகன உரிமம் பெறுவதற்காக பிரசாந்த் தனது பைக்கில் முத்துப்பாண்டியை கடலாடி என்ற ஊருக்கு அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பவும் ஊருக்கு போய்க்கொண்டிருந்தபோது எதிரே சாயல்குடி அருகே தெற்கு நரிப்பையூர் மீராஷ் மகன் சாகுல் கமீது(38) என்பவர் வேகமாக ஓட்டிவந்த மொபைட் மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்திற்கு கடலாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் வழியில் அவர் இறந்தார். படுகாயம் அடைந்த சாகுல் கமீது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், முத்துப்பாண்டி, கடலாடி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    விபத்து குறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளற் பால்பாண்டியன், சார்பு ஆய்வாளர்கள் சண்முக மூர்த்தி, போத்திக்கண்ணு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பிரசாந்த் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சாகுல் கமீது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai