Enable Javscript for better performance
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா: பிப்ரவரி 6இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா: பிப்ரவரி 6இல் தொடக்கம்

    By dn  |   Published on : 27th January 2015 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

    களக்காடு சத்தியவாகீஸ்வரர் - கோமதியம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நடைபெறுவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை இரவு சத்தியவாகீஸ்வரர்- கோமதியம்மனும், 7ஆம் தேதி சனிக்கிழமை இரவு வரதராஜப் பெருமாளும், 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தான கோபால கிருஷ்ணசுவாமியும், கிருஷ்ணன் கோயில் தெருவில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். தெப்பத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் உதவியுடன் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai