Enable Javscript for better performance
ஜார்க்கண்ட் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் காலதாமதம் ஏன்?: காங்கிரஸ் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    ஜார்க்கண்ட் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் காலதாமதம் ஏன்?: காங்கிரஸ் கேள்வி

    By dn  |   Published on : 27th January 2015 03:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜார்க்கண்டில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாததால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இதுகுறித்து அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பன்னா குப்தா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    ஜார்க்கண்டில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை.பாஜகவிற்கும், அதன் கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பிற்கும் இடையிலான உறவுநிலை சரியானதாக இல்லை எனக் கருதுகிறேன். அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுகிறது.  இதற்கு முன்பு மாநிலத்தில், ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானதற்கு அப்போதைய எதிர்கட்சியான  பாஜக கூக்குரல் எழுப்பியது என பன்னா குப்தா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai