Enable Javscript for better performance
டாப்சிலிப் யானைகளுக்கு இன்றுடன் புத்துணர்வு முகாம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    டாப்சிலிப் யானைகளுக்கு இன்றுடன் புத்துணர்வு முகாம் நிறைவு

    By dn  |   Published on : 27th January 2015 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாப்சிலிப் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் இன்றுடன்(செவ்வாய்கிழமை) முடிவடைகிறது.

     தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகள் இயற்கையான சூழல் இல்லாமல் அவதிப்பட்டுவந்தது. இதனால், ஆண்டுக்கு ஒருமுறை இயற்கையான சூழலில் ஓய்வு அளித்து புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் முகாம்கள் நடத்தவேண்டுமென்று மறைந்த பிரபல யானைகள் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அதிமுக அரசு ஆண்டுதோறும் கோவில் யானைகள் உட்பட தெப்பக்காடு, டாப்சிலிப்பில் முகாம்களில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கும் புத்துணர்வு முகாம்களை நடத்திவருகிறது.

      இந்த ஆண்டு டாப்சிலிப்பில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கடந்த டிசம்பர் 11ம் தேதி துவங்கியது. சத்தாண உணவு அளித்ததுடன், யானைகளுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது. கலீம், 48, ராமு,44, உட்பட 12 ஆண் யானைகளும், விஜிய லட்சுமி,61, சிவகாமி,62, உட்பட 10 பெண் யானைகளும் என மொத்தம் 22 யானைகள் முகாமில் பங்கேற்றன. இந்த புத்துணர்வு முகாம் இன்றுடன் செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது.

     யானைச்சவாரி: யானைகள் புத்துணர்வு முகாம் செவ்வாய்கிழமை முடிவடைவதால், புதன்கிழமை(28ம் தேதி) சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி துவங்குகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai