Enable Javscript for better performance
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜன.,31ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கொள்முதல் நிறுத்த போராட்டம் - Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜன.,31ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கொள்முதல் நிறுத்த போராட்டம்

    By dn  |   Published on : 27th January 2015 12:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fuel

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 31ம் தேதி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலைக்கேற்ப எண்னை நிறுவனங்கள் தங்களுடைய சில்லரை விற்பனை நிலையங்களில் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோலியம் அமைச்சகம் கொடுத்துள்ளது.

    அதன்படி, கடந்த ஆகஸ்டு முதல் ஜனவரி வரை பெட்ரோலியம் மற்றும் டீசல் விலை குறைத்துள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும், டீலர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    எனவே, எண்ணை நிறுவனங்கள் இதுகுறித்து மாற்று வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 31ம் தேதி  பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai