Enable Javscript for better performance
நாளை முதல் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களின் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    நாளை முதல் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களின் கண்காட்சி

    By dn  |   Published on : 27th January 2015 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களின் கண்காட்சி சென்னையில் புதன்கிழமை தொடங்குகிறது.

     இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் சுவர்ண ஜெயத்தி நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

     இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த அண்டை வீட்டுக்குழுகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பொருள்கள் பொங்கல் மேளா விற்பனை கண்காட்சி என்ற தலைப்பில் ஜன. 28 (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கண்காட்சி ஜன. 30-ஆம் தேதி வரை நடைபெறும்.

     ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் உள்ள மாநகரட்சி சமூகநலக் கூடத்தில் இந்த கண்காட்சி நடைபெறும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai