Enable Javscript for better performance
பேரூராட்சி பெண் ஊழியரிடம் ரகளை: கமுதியில் கவுன்சிலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேரூராட்சி பெண் ஊழியரிடம் ரகளை: கமுதியில் கவுன்சிலர் கைது

    By தன.திராவிட மணி  |   Published on : 27th January 2015 06:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி பெண் ஊழியரிடம் நேற்று(திங்கள்கிழமை) இரவு ரகளை செய்து கொலை மிரட்டல் செய்ததாக, கவுன்சிலரை போலீஸார், திங்கள் கிழமை கைது செய்தனர்.

    கமுதி பேரூராட்சி அலுவலகத்தில், கண்ணார்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரது மனைவி தேவி என்பவர் பணியாற்றி வருகிறார். சேகர், ஏற்கனவே பேரூராட்சியில் பணி புரிந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இதையடுத்து கருணை அடிப்படையில் தேவிக்கு பணி வழங்கப்பட்டிருந்தது. தேவியிடம் கவுன்சிலர் வேழவேந்தன் என்பவர் நேற்று(திங்கள்கிழமை) இரவில் இழிவாகத்திட்டிப் பேசி, கொலை மிரட்டல் செய்தாராம். சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் தேவி புகார் செய்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ராஜன் சஞ்சய் உத்தரவில் பெண் கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 பிரிவுகளில் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் ராஜ கென்னடி, மாணி்க்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வேந்தனை போலீஸார் கைது செய்து, கமுதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் எஸ்.கணபதி சாமி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai