Enable Javscript for better performance
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி:நாளை நாமக்கல்லில் துவக்கம் - Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி:நாளை நாமக்கல்லில் துவக்கம்

    By dn  |   Published on : 27th January 2015 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாமக்கல்லில் புதன்கிழமை(ஜன.28) துவங்க உள்ளது. அப்போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடக்க உள்ளது என மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் கே.நடராஜன் தெரிவித்தார்.

     நாமக்கல் கூடைப்பந்து சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடந்தது. இதில் மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜன் பேசியது:நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் புதன்கிழமை(ஜன.28) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவங்க உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி வரை போட்டிகள் நடக்க உள்ளது.

     ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடக்க உள்ளது. போட்டிகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் நடத்தப்படும். ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி, சத்தியபாமா, லயோலா, திருச்சி ஒய்எம்சிஏ, சென்னை எஸ்டிஏடி, வருமானவரித்துறை, ஜேப்பியார், ஹிந்துஸ்தான் ஆகிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் சேலம் சாய் ஸ்போர்ட்ஸ், சென்னை ஹிந்துஸ்தான், ஈரோடு எல்எம்ஆர் பிசி, கோவை பிஎஸ்ஜி, சென்னை ஸ்லம்ர்ஸ், ரைசிங் ஸ்டார் ஆகிய 6 அணிகளும் பங்கேற்கின்றன.

     நிகழாண்டில் இந்திய அளவில் தலைசிறந்த அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்படுகிறது என்றார்.

     சங்க நிர்வாகிகள் கந்தகுமார், கே.பி.பாண்டியராஜ், வி.முரளி, கேகேபி.சதீஷ், என்,பரத், அம்மையப்பன், ராமகிருஷ்ணன், பாஸ்கர் உள்ளிடோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai