Enable Javscript for better performance
அரசியலமைப்பிலிருந்து \\\"மதச்சார்பின்மை\\\' வார்த்தையை நீக்க வேண்டும் - சிவசேனை- Dinamani

சுடச்சுட

    

    அரசியலமைப்பிலிருந்து "மதச்சார்பின்மை' வார்த்தையை நீக்க வேண்டும் - சிவசேனை

    Published on : 28th January 2015 04:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய அரசியலமைப்பிலிருந்து "மதச்சார்பின்மை', "சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என சிவசேனைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து சிவசேனைக் கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் விளம்பரத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகள் கவனக்குறைவு காரணமாக சேர்க்கப்படவில்லை. எனினும், இதனை சிவசேனை வரவேற்கிறது.

    மேலும், இந்த இரண்டு வார்த்தைகளையும் அரசியலமைப்பிலிருந்தே நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதுதான் சிவசேனையின் விருப்பம். ஏனெனில், இந்த வார்த்தைகள் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள வரையில், இந்தியாவில் மதச்சார்பின்மை இல்லை என்ற எண்ணத்தையே உண்டாக்குகிறது என்றார் அவர்.

    மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஹிந்து மதத்தினர் தொடர்ந்து அவமதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதா?' என கேள்வியெழுப்பினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai