Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி: ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு - Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி: ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு

    By dn  |   Published on : 28th January 2015 01:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் உள்ள ராணுவப் பள்ளிக்குள் புகுந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய கொடுர தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் உட்பட 150  பேர் பலியாயினர்

    இதையடுத்து அங்கு ஆசிரியர்களுக்கு துப்பாக்கியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் கல்வி அமைச்சர் ஆடிப் கான் செய்தியாளர்களிடம் கூறும் போது மாகணத்தில் உள்ள 35 ஆயிரம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு போலீசார் இல்லை. எனவே  வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு  துப்பாக்கி பயிற்சி அளிப்பட்டுள்ளது.

    மேலும், ஆசிரியர்கள் அனுமதி பெற்று துப்பாக்கிகள் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆசிரியரும்  துப்பாக்கிகள் கொண்டு செல்வது கட்டாயம் கிடையாது. ஆனால் யார் பள்ளிகளுக்கு துப்பாக்கி கொண்டு செல்ல நினைக்கிறார்களோ அவர்களுக்கு அனுமதியுடன் வழங்குவோம் என்று கூறினார்.

    இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள சில ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai