Enable Javscript for better performance
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா அரையிறுக்கு முன்னேற்றம், வீனஸ் அதிர்ச்சி தோல்வி - Dinamani

சுடச்சுட

    

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா அரையிறுக்கு முன்னேற்றம், வீனஸ் அதிர்ச்சி தோல்வி

    By dn  |   Published on : 28th January 2015 11:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    serina

    ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    செரீனா, ஸ்லோவாகியா நாட்டை சேர்ந்தவரும் தர வரிசைப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளவருமான டொமினிகா சிபுல்கோவாவை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வெற்றி பெற்றார்.

    அதே போன்று, மகளிர் காலிறுதி போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ், தரவரிசை பட்டியலில் 18வது இடத்தில் உள்ளவருமான வீனஸ் வில்லியம்சை 6-3, 4-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai