Enable Javscript for better performance
இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஐ.எஸ். தலைவர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கான தலைவராக, தலிபானிலிருந்து வெளியேறிய தளபதி ஒருவரை அந்த அமைப்பு அறிவித்தது.

    இதுதொடர்பாக இணையதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில், ஐ.எஸ். அமைப்பின் தளபதி அபு முகமது அல்-அட்னி கூறுகையில், ""ஐ.எஸ். அமைப்பின் "குராஸன்' பகுதிக்கான தலைவராக, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் தளபதி ஹபீஸ் சயீத் கான் நியமிக்கப்படுகிறார்'' என்று அறிவித்தார்.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில இடங்களை உள்ளடக்கிய பகுதிகளை "குராஸன்' என்ற வரலாற்றுப் பெயரிட்டு அவர் குறிப்பிட்டார்.

    இந்த அறிவிப்பின் மூலம், சிரியா, இராக்கைக் கடந்து, தெற்கு ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யவும், இந்த இடங்களில் காலூன்றியுள்ள அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்குச் சவால் விடவும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai