Enable Javscript for better performance
இன்று திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவு சார்பில் இன்று புதன்கிழமை திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம் பல்கலைக்கழக ஹைடெக் ஹாலில் நடைபெறுகிறது.

    அதில் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை ஆய்வுப்பொருளாக கொண்டு சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா, கனடை, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் 133 பேர் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கி உள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு திருக்குறள் அறம், திருக்குறள் பொருள், திருக்குறள் இன்பம் என மூன்று நூல்களாக வெளியிடப்படவுள்ளது.

    கருத்தரங்கில் இந்நூல்களை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா தலைமை வகித்து வெளியிடவுள்ளார். பதிவாளர் என்.பஞ்சநதம் நூல்களை பெற்றுக்கொண்டு பேசுகிறார். மேலும் திருக்குறள் பலகையை நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிட, இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றுகிறார். தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ராம.சந்திரசேகரன் முன்னிலை வகித்துப் பேசுகிறார். தமிழியல் துறை தலைவர் முனைவர் ப.ஞானம் வாழ்த்துரையாற்றுகிறார்.

    அமர்வுத் தலைவர்களாக பேராசிரியர்கள் அ.ஆனந்தநடராஜன், அ.வே.ரங்காச்சாரியார், தமிழியல்துறை பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி, கிருஷ்ணகிரி அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் ந.பழனிவேலு, தமிழ்ப்பிரிவு உதவிப் பேராசிரியர் முனைவர் அ.அன்பு ஆகியோர் தலைமை ஏற்று கருத்தரங்க அமர்வுகளை நடத்துகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai