Enable Javscript for better performance
இரண்டாவது திருமணம் செய்த தங்கையின் கணவரை கத்தியால் குத்தியவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    இரண்டாவது திருமணம் செய்த தங்கையின் கணவரை கத்தியால் குத்தியவர் கைது

    By பாண்டி  |   Published on : 28th January 2015 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரண்டாவது திருமணம் செய்து தங்கையின் வாழ்க்கையை சீரழித்ததாக கூறி தங்கையின் கணவரை கத்தியால் குத்தியவரை இராஜதானி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  

    ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(35) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன்(25) சகோதரி வீரலெட்சுமிக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் இவர்களுக்கு குழந்தை இல்லையாம்.          

    இந்நிலையில் லட்சுமணன்(35) யாருக்கும் தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த ஜெயலெட்சுமி என்ற பென்ணை இரண்டாவது திருமணம் செய்து குடும்ப நடத்தி வந்ததாகவும்,அதில் குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.               

    இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன் தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக கூறி புதன்கிழமை அதிகாலை லட்சுமணின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.மேலும் இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீஸார் வழக்கு பதிந்து,இராசமசந்திரனை கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai