Enable Javscript for better performance
ஈரோடு கோயில் விழாவில் வெடி விபத்து: 2 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு அருகே கோயில் விழாவில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அந்தியூர் தவிட்டு பாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மாள் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி வாணவெடி வெடிக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த காளியப்பன், கருப்புசாமி ஆகிய தொழிலாளர்கள் இருவரும் வாணவெடி வெடித்தனர்.

    இதில் எதிர்பாராத விதமாக 2 பேர் மீதும் வெடி வெடித்து தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் அந்தியூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai