Enable Javscript for better performance
ஒடிஸா: சீட்டு மோசடி குறித்து விசாரித்து வந்த நீதிபதி மரணம் - Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா: சீட்டு மோசடி குறித்து விசாரித்து வந்த நீதிபதி மரணம்

    By dn  |   Published on : 28th January 2015 07:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒடிசாவில் நடந்த சீட்டு மோசடி குறித்து விசாரித்த வந்த நீதிபதி ஆர். கே. பத்ரா தனியார் மருத்துவமனையில் புதன் கிழமை காலமானார். இதுகுறித்து தனியார் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் அலுவலர் பி.என். மோஹரானா கூறியதாவது:

    நீதிபதி பத்ரா (73) அவர்கள் திங்கள் கிழமை மூச்சுத் திணறல் மற்றும் இருதய வலி காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அழற்சி காரணமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். மருத்துவர்கள் குழு தீவிரமாக முயன்றும் சிகிச்சை பலனளிக்காமல் புதன் கிழமை காலமானார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai