Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் தேடி இணையும் கட்சி தமாகா மட்டுமே: யுவராஜா- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவர்கள் தேடி இணையும் கட்சி தமாகா மட்டுமே: யுவராஜா

    By சபேஷ்  |   Published on : 28th January 2015 05:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரி மாணவர்கள் அரசியல் இயக்கத்தில் தேடி இணையும் நேரத்தில் அவர்கள் தேர்வு செய்யும் கட்சி தமாகா மட்டுமே என அரக்கோணத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற வேலூர் மாவட்ட தமாகா இளைஞர் அணி பேருந்து பிரச்சார பயண துவக்க விழாவில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா பேசினார்.

    தமாகா உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்துவதற்காக தமாகா இளைஞர் அணியினர் பேருந்து பிரச்சார பயணத்தை தமிழகமெங்கும் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சார பேருந்தின் வேலூர் மாவட்ட பயணத்துவக்கவிழா அரக்கோணத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு துரைசீனிவாசன் தலைமை தாங்கினார். பேருந்தில் பிரச்சாரத்தை துவக்கி வைத்த தமாகா இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேசியதாவது:

    தமாகா துவக்கப்பட்ட நாளில் இருந்து இளைஞர்களை குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. திருச்சியில் நடைபெற்ற துவக்கவிழாவிற்கு வந்தவர்களில் 50 சதவிகிதம் பேர் இளைஞர்களே என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இளைஞர்கள் அனைவரையும் தீவிரப்படுத்தி தமாகாவில் சேர்ப்பதற்காக தலைவர் வாசன் அவர்களின் திட்டத்தின்படி இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து பிரச்சாரத்தின் மூலம் இளைஞர்களிடையே புதிய உத்வேகம் ஏற்பட்டு கல்லூரி மாணவ மாணவிகள் தமாகாவில் இணைவார்கள் என்பது உறுதி என்றார் யுவராஜா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai