Enable Javscript for better performance
சத்தீஸ்கர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ இருவர் கட்சியில் இருந்து நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சத்தீஸ்கர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ இருவர் கட்சியில் இருந்து நீக்கம்

    By dn  |   Published on : 28th January 2015 05:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தீஸ்கரில், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரண்டு எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது.இது குறித்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிதின் திரிவேதி, புதன்கிழமை கூறியதாவது:

    பில்ஹா தொகுதி எம்.எல்.ஏ ஷியாரம் கௌசிக், குந்தேர்தெகி தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திர குமார், பிளாஸ்பூர் மாநகர முன்னாள் மேயர் வானி ராவ், முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் ஜுனேஜா ஆகியோர், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டனர்.

    இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவர்கள் நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏவும் உரிய விளக்கம் அளித்தனர். ஆனால், எம்.எல்.ஏக்கள் ஷியாரம் கௌசிக், ராஜேந்திர குமார் ஆகிய இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த முடிவின்படி அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்  என நிதின் திரிவேதி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai