Enable Javscript for better performance
சீனாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விருப்பம்: ராஜ்நாத் சிங்- Dinamani

சுடச்சுட

    

    சீனாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விருப்பம்: ராஜ்நாத் சிங்

    Published on : 28th January 2015 02:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajnath_singh

    எல்லைத் தகராறு உள்பட சீனாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படைப்பிரிவின் (ஐ.டி.பி.பி.) முகாமை புதன்கிழமை தொடக்கி வைத்து, இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

    சீனா - இந்தியா எல்லை நெடுகிலும், உணர்வு அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. இதுதான் எனது எல்லைப் பகுதி என்று சீனா தெரிவிக்கிறது. அதை நாம் மறுத்து, இதுதான் உனது எல்லை எனது வேறுபகுதியை சீனாவிடம் தெரிவிக்கிறோம்.

    சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த விவகாரத்தில், சீனா மேலும் ஆர்வம் காட்ட வேண்டும். சீனாவுடனான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது.

    நாடு பிடிக்கும் கொள்கையில், இந்தியாவுக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இந்திய வரலாற்றில் இருந்து, இந்தியா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுபோல், பிற நாடுகளின் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது கிடையாது என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai