Enable Javscript for better performance
சீன மக்கள் குடியரசு தின ராணுவ அணிவகுப்பு: ரஷிய அதிபருக்கு அழைப்பு - Dinamani

சுடச்சுட

    

    சீன மக்கள் குடியரசு தின ராணுவ அணிவகுப்பு: ரஷிய அதிபருக்கு அழைப்பு

    Published on : 28th January 2015 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    china national day

    சீன மக்கள் குடியரசு 1949-ல் உதயமானதைத் தொடர்ந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ராணுவ அணிவகுப்பை நடத்தி வருவதை சீனா வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

    இந்த ஆண்டு சீனா தலைநகர் பெய்ஜிங்கில்  நடைபெற உள்ள இரண்டாவது உலகப்போரில் வெற்றி பெற்றதன்  70-வது ஆண்டு நினைவு தின ராணுவ அணிவகுப்பை  பார்வையிட ரஷ்ய அதிபர் புதினுக்கு சீன அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து சீனாவின் பொது பாதுகாப்புக் கழகத்தின் தலைமை அதிகாரி ஃபூ சென்குவா சீன இணையதள  ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும் போது போர் நினைவு நிகழ்ச்சிக்கு ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதை சீன வெளியுறவு துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. சீன ராணுவ அணிவகுப்பை வெளிநாட்டுத் தலைவர்கள் பார்வையிடுவது இதுவே முதன்முறையாகும்,

    இந்த நிகழ்ச்சிக்கு  சீனாவில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai