Enable Javscript for better performance
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: அமர்சிங்கிற்கு போலீஸார் சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: அமர்சிங்கிற்கு போலீஸார் சம்மன்

    Published on : 28th January 2015 04:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amar_singh

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. அமர் சிங்கிற்கு தில்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த கொலைக்கு ஐ.பி.எல். போட்டிகள் காரணமா? என்று விசாரணை நடத்த முடிவு செய்த காவல்துறையினர், அமர் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். சுனந்த புஷ்கர் கொல்லப்படுவதற்கு முன் அன்று மாலை செய்தியாள்களிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருடன் சசிதரூருக்கு தொடர்பு இருப்பதாக சுனந்தா சந்தேகப்பட்டதாகவும், சசி தரூருக்காக ஐபிஎல் விவகாரத்தில் ஏற்பட்ட தொல்லைகளை தான் ஏற்றுக்கொண்டதாகவும் அவர்  பத்திரிகையாளர்களிடம் கூறினாராம். இது தொடர்பாக 3 செய்தியாளர்களிடம் போலீஸார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.

     இந்நிலையில் கொலை நடந்த இரண்டு நாட்களுக்கு முன்  ஐபிஎல் பிரச்சனைகள் தொடர்பாக அமர்சிங்கிடம்  சுனந்தா புஷ்கர் பேசியதாக கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் புலானய்வு விசாரணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு  அமர்சிங் விளக்கம் அளித்தால் சரியாக இருக்கும் போலீஸார் கருதுகின்றனர். இந்நிலையில் தான் அமர்சிங்கிற்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்னர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai