Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு லண்டன் செல்ல அனுமதி மறுப்பு: மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு லண்டன் செல்ல அனுமதி மறுப்பு: மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Published on : 28th January 2015 07:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தில்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்யவிருந்த தனக்கு குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்த நடவடிக்கையை எதிர்த்து "க்ரீன் பீஸ்' என்ற சர்வதேச சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பின் ஆர்வலர் ப்ரியா பிள்ளை தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு, மத்திய உளவுத் துறை, இந்திய குடியுரிமைத் துறை ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    ப்ரியா பிள்ளை கடந்த 11ம் தேதி லண்டன் செல்ல முற்பட்டார். ஆனால் இவரை பயணம் செய்ய விடாமல் அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.அவரது விசா ஆவணத்தில் "ஆஃப்லோடெட்' (பயணம் செல்ல உகந்தவர் அல்ல) என்ற முத்திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai