Enable Javscript for better performance
சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் குடிநீர் வரி செலுத்தாத 18 கடைகளுக்கு சீல் - Dinamani

சுடச்சுட

    

    சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் குடிநீர் வரி செலுத்தாத 18 கடைகளுக்கு சீல்

    Published on : 28th January 2015 08:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு  குடிநீர் வரி செலுத்தாத அண்ணாசாலையில் அமைந்துள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள 18 வணிக கடைகளுக்கு  புதன்கிழமை சீல் வைக்கும் நடவடிக்கை குடிநீர் வாரியத்தால் துவங்கப்பட்டது.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் , வரியாக சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ள ஆண்டு சொத்து மதிப்பில்  7 சதவீதத்தை  வசூலித்து வருகிறது.  குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் வரியானது

    சொத்து வரியின் ஒரு பகுதியாகும்.  இந்த சட்ட பூர்வமான வரியை நுகர்வோர்கள் குடிநீர் வாரியத்திடமிருந்து குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு பெறாவிட்டாலும் செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

    எனவே  ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள 619 வணிக கடைகள் நுகர்வோர்களாக குடிநீர் வரி யினை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டி உள்ளது. இதில் குடிநீர் வரிக்கட்டாத 18 வணிக கடைகளின் மீது வருவாய் வசூல் சட்டபடி ஜப்தி நடவடிக்கை எடுக்கவும் இணைப்பை துண்டிப்பது போன்ற நடவடிக்கை எடுப்பதற்காக நோட்டிஸ் குடிநீர் வாரியத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்தது.

    மேலும் மேல் நடவடிக்கையாக நோட்டிஸ் வழங்கப்பட்ட 18 வணிக கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை இன்று துவங்குவதற்கு முன்பாகவே 7

    வணிக கடைகள் இன்று காலை வாரிய அலுவலகத்தில் குடிநீர் வரியை கட்டி விட்டனர். வரி ரூ.73.287 கட்டாத கடைகளான திரு.பி.கே. துர்காராவ் கடைக்கும் , வரி ரூ.1,46,734 கட்டாத திரு.ராஜீ லக்கர் கடைக்கும்  மற்றும் ரூபாய் 50,285 கட்டாத கடையான திருமதி .பாத்திமா ஹரியு  ஆகிய மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    மொத்தம் 18 கடைகளில் சீல் வைக்கப்பட்ட 3 கடைகளின் நிலுவைத் தொகை ரூபாய் 2,70,306 தவிர மீதமுள்ள 15 கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து காசோலைகள் மற்றும் ரொக்கமாக ரூபாய் 7,01,060 (ரூபாய் ஏழு லட்சத்து ஆயிரத்து அறுபது) வசூல் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நிதி இயக்குநர் திரு. சி. ஆறுமுகம், மேற்பார்வை பொறியாளர் திரு.எஸ்.எஸ். தினகரன், நிதி கட்டுப்பாட்டு அலுவலர் திருமதி கீதாகுமார், திரு.பீட்டர், திரு. உதயகுமார். பகுதி பொறியாளர் - 9, திரு. குலோத்துங்கன், வருவாய் துணை ஆட்சியர் ஓய்வு திரு. சிம்மன், வட்டாட்சியர் திரு. எம்.ஆர். யுகேந்திரன், மற்றும் பகுதி மற்றும் பணிமனை அலுவலர்கள் உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai