Enable Javscript for better performance
ஜனவரி 31-இல் சுஷ்மா சீனா பயணம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வரும் சனிக்கிழமை சீனா புறப்பட்டுச் செல்கிறார்.  அங்கு சீனா, ரஷ்ய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்கிறார்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நான்கு நாள் பயணமாக சீனா செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மார் ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்தும், வர்த்தக முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்படும்.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

    இதேபோல, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லேவ்ரோவ், சீன வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்கிறார்.

    பெய்ஜிங்கில் நடைபெறும் சீன-இந்திய ஊடக மாநாட்டை அவர் திறந்து வைப்பார் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai