Enable Javscript for better performance
ஜன.31-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப் போராட்டம் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜன.31-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப் போராட்டம் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    By dn  |   Published on : 28th January 2015 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெட்ரோலிய பொருள்களின் விலை ஏற்ற, இறக்க காலங்களில் இழப்பு ஏற்படாமல் இருக்க மாற்று வழியை ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி  ஜன.31-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலர் எம்.ஹதர்அலி ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருள்களின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் தங்களது சில்லறை விற்பனை நிலையங்களில், பெட்ரோலிய பொருள்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.

    அதன்படி ஒவ்வொருமாதமும் 15-ஆம் தேதி, 30 அல்லது 31-ஆம் தேதிகளில் விலை மாற்றத்தினை செய்து வருகின்றனர்.

    தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருள்களின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. இதனால் கடந்த 2014 ஆகஸ்ட் முதல் 2015 ஜனவரி 16-ஆம் தேதி வரை பெட்ரோலுக்கு 10 முறையும் ( மொத்தம் ரூ.16.25) , டீசலுக்கு 5 முறையும் ( மொத்தம் ரூ.11.48) விலை குறைப்பு செய்துள்ளனர்.

    இந்த விலை குறைப்பால் பெட்ரோலிய விற்பனையாளர்கள் தங்கள் இருப்பு சரக்கிற்கு இழப்பினை சந்தித்து வருகின்றனர்.

    எனவே  விலை ஏற்ற, இறக்க காலங்களில் இருப்பு சரக்கின் மதிப்பில் இழப்பு ஏற்படாமல் இருக்க மாற்று வழியை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் விற்பனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி, கடந்த 2014 டிசம்பர் முதல் விற்பனை நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை சரியாக பராமரிக்காவிட்டால் முதல் முறை ரூ.10 ஆயிரம், 2-ஆவது முறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், விற்பனையாளர்கள் கமிசனில் 45 சதவீதம் பிடித்தம் உள்ளிட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    கழிப்பறைகளை பராமரிப்பது ஒவ்வொரு விற்பனை நிலையத்தின் கடமை. அதேபோன்று உபயோகிப்பவர்களும் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக அதிகப்படியான அபராதம், 7 நாள் விற்பனை இடைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் சில்லறை விற்பனையாளர்கள இதை பெட்ரோலியத்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும்.

    இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்ட போராட்டமாக ஜனவரி 31-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப்போராட்டம் நடைபெறும். இதனால் தமிழக அரசுக்கு மதிப்புக் கூட்டு வரி (வாட்) மூலம் கிடைக்கும் ரூ.26 கோடி, மத்திய அரசுக்கு கலால் வரி மூலம் கிடைக்கும் ரூ.24 கோடி இழப்பு ஏற்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai