Enable Javscript for better performance
தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    By dn  |   Published on : 28th January 2015 03:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    o

    இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் எழுதிய கடிதத்தில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூலை 24ம் தேதி 1983–ம் ஆண்டு முதல் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கைக்கு திரும்பி உள்ளனர்.

    தற்போது தமிழ்நாட்டில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர், 107 முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திரும்பி அனுப்ப மத்திய அரசு தமிழக உயர் அதிகாரியை வருகிற 30–ந்தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு அனைத்து உதவிகளும் தமிழக அரசு ஆணைப்படி வழங்கப்பட்டு வருகிறது. சமூக நல திட்டங்கள் அடிப்படையில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தற்போது இலங்கை வடகிழக்கு பகுதியில் இன்னமும் சுமூகமான சூழ்நிலை ஏற்பட வில்லை. ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அங்கு நிலைமைகள் மாறும் வரை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai