Enable Javscript for better performance
திருச்செந்தூர் கழிவுநீரோடையில் இருந்த பெண்மணி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் கழிவுநீரோடையில் இருந்த பெண்மணி மீட்பு

    By சுப்பிரமணியன்  |   Published on : 28th January 2015 06:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiruchendur

    திருச்செந்தூரில் கழிவுநீரோடையில் இருந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் 2 நாட்களுக்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டார்.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிப்படைந்த பெண்மணி அடிக்கடி சுற்றித்திரிவார். இந்நிலையில் கோவில் வாசல் விடுதிப்பகுதியிலிருந்து ஓட்டல் தமிழ்நாடு செல்லும் சாலையின் அருகில் உள்ள ஒரு கழிவு நீரோடையில் அந்த பெண்மணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளே இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்மணி புதன்கிழமையன்று காலையில் கழிவுநீரோடையிலிருந்த கழிவுப்பொருட்களை ஓடைக்கு மேலே வீசி வந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கோ.பத்மநாபபிள்ளை, போக்குவரத்து உதவி ஆய்வாளர் சு.நம்பிராஜன், காவல் உதவி ஆய்வாளர் அமலோற்பவம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ந.நட்டார் ஆனந்தி, பேரூராட்சித்தலைவர் (பொ) தொ.ராஜநளா உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி சுகாதாரப்பணியாளர்களைக் கொண்டு அப்பெண்மணியை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

    மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண்மணியை தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai