Enable Javscript for better performance
தில்லி இரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நாளை தாற்காலிக சேவை நிறுத்தம் - Dinamani

சுடச்சுட

    

    தில்லி இரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நாளை தாற்காலிக சேவை நிறுத்தம்

    By dn  |   Published on : 28th January 2015 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    metrotrain33

    தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பாதுகாப்பு கவச வாகனங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 29) நடைபெற உள்ளது.  

    இதையொட்டி, தில்லி சென்ட்ரல் செகரட்ரியேட், உத்யோக் பவன் ஆகிய மெட்ரோ நிலையங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டிஎம்ஆர்சி நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    தில்லி குடியரசு தின அணிவகுப்பின்போது பங்கேற்ற பாதுகாப்பு கவச வாகனங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி போலீஸரின் அறிவுறுத்தலின்பேரில் அன்றைய தினம் சென்ட்ரல் செகரட்ரியேட், உத்யோக் பவன் ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை பிற்பகல் 2 முதல் மாலை 6.30 மணி வரை தாற்காலிகமாக நிறுத்தப்படும்.

     எனினும், ஹூடா சிட்டி சென்டர் - ஜஹாங்கீர்புரி, மண்டி ஹவுஸ் - பாதர்பூர் ஆகிய வழித்தடங்களில் செல்வோர், வழித்தடம் மாறி பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். இதேபோல் மற்ற வழித்தடங்களில் எப்போதும் போல் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai